இணையத்தின் வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை அடியோடு மறைத்து விட்டதா??
ஒருபக்க கட்டுரை
ஜ.பாரத்,
ஆய்வாளர்,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயம்புத்துர்.
இந்தக் கம்ப்யூட்டர் காலத்தில், வாசிப்பதும், படிப்பதும், பகிர்வதும் கடந்த காலத்தைவிட குறைந்து கணப்படுகிறது என்ற ஒரு கூற்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இணையத்தில் வாசிக்கப்படும் நாளிதழோ, கட்டுரைகளோ முழுமையாக வாசிக்கப்படுவதில்லை என்பதும் ஒரு செய்தி. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளம் மூலமாக வாசிப்புக்கு உள்ள ஒரு மவுசு குறைந்துவிடுகிறது, புத்தக வாசிப்பும் அவ்வளவாக இளைஞர்களிடம் காணப்படுவதில்லை என்ற செய்திகள் வந்ததையும் யாவரும் அறிந்ததே.
இணையதள கட்டுரையில் ஐப்பர் லின்க் வசதி
நாம் ஒரு செய்தியை நாளிதழில் படிக்கும்போது தெரியாத அல்லது டெக்னிக்கல் வார்த்தைகளை படிக்கும்போது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவோம் அல்லது அகராதி பார்க்கும் பழக்கம் உடையவர்கள் உடனே அதை பார்த்து தெரிந்து கொண்டு அடுத்து பத்திக்கு செல்வார்கள். ஆனால், இணையதளத்தில் கட்டுரைகளை வாசிக்கும்போது, தெரியாத அல்லது ஒரு புதிய வார்த்தைகளை பிரசுரக்கும் போது ஐப்பர் லின்க் செய்துவிடுவார்கள், வாசகர் அந்த வார்த்தையை க்ளிக் செய்யும் போது அந்த வார்த்தைக்கான அர்த்தமும் முழு விவரமும் உள்ள பக்கத்திற்கு அழைத்து சென்றுவிடும். ஆதலால், வாசகர்கள் அதை முழுமையாக தெரிந்துகொண்டு மறுபடியும் கட்டுரையை படிக்கும் வசதி இணையதள கட்டுரையில் உள்ளது. இணையதளத்தின் பலம் இது.
இணையச்செய்தி, நாளிதழ் செய்தி அடிப்படை
ஒரு வாசகர் செய்தியை அல்லது கட்டுரைகளை இணையத்திலோ நாளிதழிலேயோ படிக்கும்போது செய்திகளை உள்வாங்கி கொள்ளும் வழி அல்லது முறை எல்லாருக்கும் பொது. செய்தி எழுதும் பத்திரிக்கையாளரும் சரி அந்த செய்தியை படிக்கும் வாசகனும் சரி அதற்கு அடிப்படையாக இருக்கும் காரணிகள் என்ன, எங்கே, யார், எப்பொழுது, எப்படி மற்றும் ஏன். இந்த அடிப்படையில் தான் எந்த ஒரு செய்தியோ, கட்டுரையோ எழுதப்படுகிறது அல்லது வடிவமைக்கப்படுகிறது. அதே வழியில்தான் ஒரு வாசகனின் மனதிலும் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.
ஆகையால், செய்தியை படிக்கும் முறைதான் இங்கு மாற்றமே தவிர படிக்கும் பழக்கம் என்றுமே மாறப்போவதில்லை. அதுபோல் புத்தகங்களின் வாசிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
இணையத்தில் நாம் ஒரு செய்தியை படித்துக்கொண்டிருக்கும்போதே அச்செய்தியின் முந்தைய விவரங்களையோ அல்லது முன்னோரு நாளில் வெளிவந்த செய்தியையோ சுலபமாக நாம் அறிந்து கொள்ள முடியும். நாளிதழ்களில் நாம் அவ்வாறு அறிந்துக்கொள்ள இயலாது. இணையம் மூலமாக நாம் பல நாளிதழ்களில் வெளியான செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் சராசரியாக இரண்டு நாளிதழ்களுக்கு மேல் யாரும் வாங்கி படிப்பதில்லை.
இணையத்தில் நாம் ஒரு செய்தியை படித்துக்கொண்டிருக்கும்போதே அச்செய்தியின் முந்தைய விவரங்களையோ அல்லது முன்னோரு நாளில் வெளிவந்த செய்தியையோ சுலபமாக நாம் அறிந்து கொள்ள முடியும். நாளிதழ்களில் நாம் அவ்வாறு அறிந்துக்கொள்ள இயலாது. இணையம் மூலமாக நாம் பல நாளிதழ்களில் வெளியான செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் சராசரியாக இரண்டு நாளிதழ்களுக்கு மேல் யாரும் வாங்கி படிப்பதில்லை.
ஸ்மார்ட் போன்கள், டேப்லட்டுகளின் ஆதிக்கம்
கடந்த சில வருடங்களாக செய்தி தொடர்புதுறையில் ஏற்பட்ட முன்னேற்றம் வேறு எந்த துறையிலும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. தொலைதொடர்பு துறையின் புதிய முன்னேற்றங்கள் 2G, 3G போன்ற நெட்வொர்க் வசதிகளின் மூலம் ஸ்மார்ட் போன்கள் டேப்லட்டுகள், மடிக்கணிணி போன்று இணைக்கும் வசதி உள்ளது. இதற்கு Java மென்பொருள் கொண்ட கைப்பேசிகள் விதிவிலக்கு அல்ல. அதுவும் அடங்கும்.
பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களின் நிறுவன அப்ளிகேசன்களை ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் ஸ்டோர்களில் கிடைக்க ஏற்பாடு செய்துவிடுகின்றனர். பிறகு, அந்த அப்ளிகேசன்கள் வாசகர்களின் கைப்பேசி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு தொலைகாட்சியில் மற்றும் வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படும் செய்திகளை ஒரு வாசகன் தான் இருந்த இடத்திலேயே இருந்து பெறமுடியும். இந்த அப்ளிகேசன்களுக்கு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அதாவாது os செய்த நிறுவனம் பெறும்பாலும் எந்த கட்டணமும் வசூலிப்பது கிடையது.
தற்போது ஸ்மார்ட் போன்கள் டேப்லட்டுகள், இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. இது போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களால் படிக்கும் பழக்கமும், செய்தியின் முக்கியத்துவமும் ஒருபோதும் குறையப்போவதுஇல்லை. தற்போது மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருக்கும் பலர் பிடிஎப் முறையில் உள்ள கட்டுரைகளையும், கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற படைப்புகளையும் இணையம் மூலமாக படிப்பது பரவாலக காணப்படுகிறது. அதை அவர்கள் படிப்பது மட்டுமின்றி மற்ற வாசகர்களுடன் பகிர்நதும் கொள்கின்றனர். இதனால், நாளிதழின் விற்பனை எதிர்காலத்தில் குறையுமோ ஒழிய படிக்கும் பழக்கம் மற்றும் நாளிதழின் ஆதிக்கம் என்றும் குறையப்போவது இல்லை. வித்தியாசம், ஆன்லைன் நாளிதழ் ஒரு பிரதி ரூபாய் இரண்டுக்கு விற்கப்படும் அவ்வளவுதான். இதனால் நாம் நம் நாட்டையும், காட்டையும் காப்பாற்றமுடியும். வருடா வருடம் இந்தியாவில் மட்டும் 40 மில்லியன் டன் பேப்பர்களை நாம் நாளிதழ் அச்சடிக்க செலவழிக்கின்றோம்.
படிக்கும் தளம் தான் இங்கு மாற்றப்பட்டு உள்ளதே தவிர வாசிப்பு மற்றும் வாசிப்பு பழக்கம் இணையம் மூலம் அதிகப்படுத்தப்பட்டுதான் உள்ளதே தவிர குறையவில்லை. சமூக வளைதளம் மூலம் எந்த ஒரு செய்தியும் காட்டுத் தீ போன்று பரவ வைக்கமுடியும்.
கடந்த 17 வருடங்களாக தி இந்து நாளிதழை படிக்கும் நான், கடந்து 3 வருடங்களாக தி இந்து நாளிதழையும் மற்ற வெளிநாட்டு பத்திரிக்கைகளின் கட்டுரைகளையும் இணையம் மூலமாகத்தான் படித்து வருகிறேன். ஆகையால், இணையத்தின் வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை அடியோடு மறைத்து விட்டது என்ற எண்ணம் எல்லோரும் மாற்றிகொள்ள வேண்டிய ஒரு எண்ணம்.
எல்லாற்றுக்கும் மேல், எந்த அளவு இணையத்தை உபயோகிக்கிறோம் என்பதை விட இணையத்தில் எதை எவ்வளவு நேரம் வாசித்தோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
கடந்த 17 வருடங்களாக தி இந்து நாளிதழை படிக்கும் நான், கடந்து 3 வருடங்களாக தி இந்து நாளிதழையும் மற்ற வெளிநாட்டு பத்திரிக்கைகளின் கட்டுரைகளையும் இணையம் மூலமாகத்தான் படித்து வருகிறேன். ஆகையால், இணையத்தின் வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை அடியோடு மறைத்து விட்டது என்ற எண்ணம் எல்லோரும் மாற்றிகொள்ள வேண்டிய ஒரு எண்ணம்.
எல்லாற்றுக்கும் மேல், எந்த அளவு இணையத்தை உபயோகிக்கிறோம் என்பதை விட இணையத்தில் எதை எவ்வளவு நேரம் வாசித்தோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
Great..!
ReplyDelete