Wednesday, December 31, 2014

சித்திரையையும் தொலைத்தேன்...

சித்திரையையும் தொலைத்தேன்...


முதலில் அடையாளத்தை
தொலைத்தேன்...
பின் எனது தாய் மொழியை
பின் எனது முகவரியை
இப்போது

Happy New Year 2015
என கூறி
சித்திரையையும்
தொலைக்கச்சொல்லி
சித்திரவதைப்படுத்தாதீர்கள்
ப்ளீஸ்...


எனக்கு நீங்கள் கொடுக்கும்
அந்த ஒரு நாள் விடுப்பு


போதும்..
அந்த விடுப்புக்காக சொல்கிறேன்...
Happy New Year 2015 to All. 


_பாரத் ஜம்புலிங்கம்.

Tuesday, December 30, 2014

இன்றும் தாமதம்....



என்றும்போல் இன்றும் தாமதம்...


பள்ளி முடிந்து எல்லோரையும்
வீட்டுக்கு அனுப்பிவிட்டு
சல்லாத்தாக
சீவல ஐஸ் சாப்பிட்டுவிட்டு
கொசுறு மாங்காய் கீத்தையும்
வாங்கி கொண்டு....

இந்த உலகத்தையே வென்று
வீழ்த்தியது  போல்
ஒரு நிதான நடையில்

இரு சக்கர சைக்கிளையும்
தள்ளிக்கொண்டு..
வரும் வழியில் கிடக்கும்
ஜல்லிக்கல்லைஉதைத்துக்கொண்டு
பொழுது போயி.. விளக்கேற்றிய பின்
 வீடு நுழைந்ததும் கூறும்
முதல் வார்த்தை...

 "அம்மா பசிக்குது......"

_ பாரத் ஜம்புலிங்கம்.

Monday, December 29, 2014

அழகிகளே என்னை மன்னியுங்கள்...





அழகிகளே என்னை மன்னியுங்கள்...


அரைகுறை ஆடையால்
அட்டைபடத்தை
அலங்கரிக்கும் எத்தனையோ
அழகிகள் உள்ள இந்த ஊரில்

கோவணத்துடன் இளைப்பாறும்
இந்த விவசாயி
தான் என் கண்களுக்கு
அழகனாகத் தெரிகிறான்.

அழகிகளே என்னை மன்னியுங்கள்...
_ பாரத் ஜம்புலிங்கம்.









எனக்கு கவிதை வராது...



கிராமாயணத்தை மறந்துவிட்டு - நகரில்
உட்கார்ந்து ராமாயணத்தை
படித்தால் அந்த ராமரா
சோறு போடுவார்... ?

கொஞ்சம் கிளாமரா - கவிதை
எழுத நான் என்ன வாலியா
அல்லது
கண்ணதாசனா ?

கிராம வாழ்க்கை மறந்து
நகர வாழ்க்கை நாடிய
நானும் ஒரு
சம்பளதாசனே...

நானும் ஒரு சம்பளதாசனே !

_ பாரத் ஜம்புலிங்கம்.