Wednesday, December 31, 2014

சித்திரையையும் தொலைத்தேன்...

சித்திரையையும் தொலைத்தேன்...


முதலில் அடையாளத்தை
தொலைத்தேன்...
பின் எனது தாய் மொழியை
பின் எனது முகவரியை
இப்போது

Happy New Year 2015
என கூறி
சித்திரையையும்
தொலைக்கச்சொல்லி
சித்திரவதைப்படுத்தாதீர்கள்
ப்ளீஸ்...


எனக்கு நீங்கள் கொடுக்கும்
அந்த ஒரு நாள் விடுப்பு


போதும்..
அந்த விடுப்புக்காக சொல்கிறேன்...
Happy New Year 2015 to All. 


_பாரத் ஜம்புலிங்கம்.

Tuesday, December 30, 2014

இன்றும் தாமதம்....



என்றும்போல் இன்றும் தாமதம்...


பள்ளி முடிந்து எல்லோரையும்
வீட்டுக்கு அனுப்பிவிட்டு
சல்லாத்தாக
சீவல ஐஸ் சாப்பிட்டுவிட்டு
கொசுறு மாங்காய் கீத்தையும்
வாங்கி கொண்டு....

இந்த உலகத்தையே வென்று
வீழ்த்தியது  போல்
ஒரு நிதான நடையில்

இரு சக்கர சைக்கிளையும்
தள்ளிக்கொண்டு..
வரும் வழியில் கிடக்கும்
ஜல்லிக்கல்லைஉதைத்துக்கொண்டு
பொழுது போயி.. விளக்கேற்றிய பின்
 வீடு நுழைந்ததும் கூறும்
முதல் வார்த்தை...

 "அம்மா பசிக்குது......"

_ பாரத் ஜம்புலிங்கம்.

Monday, December 29, 2014

அழகிகளே என்னை மன்னியுங்கள்...





அழகிகளே என்னை மன்னியுங்கள்...


அரைகுறை ஆடையால்
அட்டைபடத்தை
அலங்கரிக்கும் எத்தனையோ
அழகிகள் உள்ள இந்த ஊரில்

கோவணத்துடன் இளைப்பாறும்
இந்த விவசாயி
தான் என் கண்களுக்கு
அழகனாகத் தெரிகிறான்.

அழகிகளே என்னை மன்னியுங்கள்...
_ பாரத் ஜம்புலிங்கம்.









எனக்கு கவிதை வராது...



கிராமாயணத்தை மறந்துவிட்டு - நகரில்
உட்கார்ந்து ராமாயணத்தை
படித்தால் அந்த ராமரா
சோறு போடுவார்... ?

கொஞ்சம் கிளாமரா - கவிதை
எழுத நான் என்ன வாலியா
அல்லது
கண்ணதாசனா ?

கிராம வாழ்க்கை மறந்து
நகர வாழ்க்கை நாடிய
நானும் ஒரு
சம்பளதாசனே...

நானும் ஒரு சம்பளதாசனே !

_ பாரத் ஜம்புலிங்கம்.


Tuesday, May 27, 2014

இணையத்தின் வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை அடியோடு மறைத்து விட்டதா??
ஒருபக்க கட்டுரை

.பாரத், 
ஆய்வாளர்,
பாரதியார் பல்கலைக்கழகம்,
ோயம்புத்துர்.


இந்தக் கம்ப்யூட்டர் காலத்தில், வாசிப்பதும், படிப்பதும், பகிர்வதும் கடந்த காலத்தைவிட குறைந்து கணப்படுகிறது என்ற ஒரு கூற்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இணையத்தில் வாசிக்கப்படும் நாளிதழோ, கட்டுரைகளோ முழுமையாக வாசிக்கப்படுவதில்லை என்பதும் ஒரு செய்தி. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளம் மூலமாக வாசிப்புக்கு உள்ள ஒரு மவுசு குறைந்துவிடுகிறது, புத்தக வாசிப்பும் அவ்வளவாக இளைஞர்களிடம் காணப்படுவதில்லை என்ற செய்திகள் வந்ததையும் யாவரும் அறிந்ததே. 

இணையதள கட்டுரையில் ஐப்பர் லின்க் வசதி
நாம் ஒரு செய்தியை நாளிதழில் படிக்கும்போது தெரியாத அல்லது டெக்னிக்கல் வார்த்தைகளை படிக்கும்போது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவோம் அல்லது அகராதி பார்க்கும் பழக்கம் உடையவர்கள் உடனே அதை பார்த்து தெரிந்து கொண்டு அடுத்து பத்திக்கு செல்வார்கள். ஆனால், இணையதளத்தில் கட்டுரைகளை வாசிக்கும்போது, தெரியாத அல்லது ஒரு  புதிய வார்த்தைகளை பிரசுரக்கும் போது ஐப்பர் லின்க் செய்துவிடுவார்கள், வாசகர் அந்த வார்த்தையை க்ளிக் செய்யும் போது அந்த வார்த்தைக்கான அர்த்தமும் முழு விவரமும் உள்ள பக்கத்திற்கு அழைத்து சென்றுவிடும். ஆதலால், வாசகர்கள் அதை முழுமையாக தெரிந்துகொண்டு மறுபடியும் கட்டுரையை படிக்கும் வசதி இணையதள கட்டுரையில் உள்ளது. இணையதளத்தின் பலம் இது.

இணையச்செய்தி, நாளிதழ் செய்தி அடிப்படை
ஒரு வாசகர் செய்தியை அல்லது கட்டுரைகளை இணையத்திலோ நாளிதழிலேயோ படிக்கும்போது செய்திகளை உள்வாங்கி கொள்ளும் வழி அல்லது முறை எல்லாருக்கும் பொது. செய்தி எழுதும் பத்திரிக்கையாளரும் சரி அந்த செய்தியை படிக்கும் வாசகனும் சரி அதற்கு அடிப்படையாக இருக்கும்  காரணிகள் என்ன, எங்கே, யார், எப்பொழுது, எப்படி மற்றும் ஏன். இந்த அடிப்படையில் தான் எந்த ஒரு செய்தியோ, கட்டுரையோ எழுதப்படுகிறது அல்லது வடிவமைக்கப்படுகிறது. அதே வழியில்தான் ஒரு வாசகனின் மனதிலும்  பதிவிறக்கம் செய்யப்படுகிறது. 

ஆகையால், செய்தியை படிக்கும் முறைதான் இங்கு மாற்றமே தவிர படிக்கும் பழக்கம் என்றுமே மாறப்போவதில்லை. அதுபோல் புத்தகங்களின் வாசிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கும். 

இணையத்தில் நாம் ஒரு செய்தியை படித்துக்கொண்டிருக்கும்போதே அச்செய்தியின் முந்தைய விவரங்களையோ அல்லது முன்னோரு நாளில் வெளிவந்த செய்தியையோ சுலபமாக நாம் அறிந்து கொள்ள முடியும். நாளிதழ்களில் நாம் அவ்வாறு அறிந்துக்கொள்ள இயலாது. இணையம் மூலமாக நாம் பல நாளிதழ்களில் வெளியான செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் சராசரியாக இரண்டு நாளிதழ்களுக்கு மேல் யாரும் வாங்கி படிப்பதில்லை. 


ஸ்மார்ட் போன்கள், டேப்லட்டுகளின் ஆதிக்கம்
கடந்த சில வருடங்களாக செய்தி தொடர்புதுறையில் ஏற்பட்ட முன்னேற்றம் வேறு எந்த துறையிலும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. தொலைதொடர்பு துறையின் புதிய முன்னேற்றங்கள் 2G, 3G போன்ற நெட்வொர்க் வசதிகளின் மூலம் ஸ்மார்ட் போன்கள் டேப்லட்டுகள், மடிக்கணிணி போன்று இணைக்கும் வசதி உள்ளது. இதற்கு Java மென்பொருள் கொண் கைப்பேசிகள் விதிவிலக்கு அல்ல. அதுவும் அடங்கும். 

பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களின் நிறுவன அப்ளிகேசன்களை ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் ஸ்டோர்களில் கிடைக்க ஏற்பாடு செய்துவிடுகின்றனர். பிறகு, அந்த அப்ளிகேசன்கள் வாசகர்களின் கைப்பேசி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு தொலைகாட்சியில் மற்றும் வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படும் செய்திகளை ஒரு வாசகன் தான் இருந்த இடத்திலேயே இருந்து பெறமுடியும். இந்த அப்ளிகேசன்களுக்கு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அதாவாது os செய்த நிறுவனம் பெறும்பாலும் எந்த கட்டணமும் வசூலிப்பது கிடையது. 

தற்போது  ஸ்மார்ட் போன்கள் டேப்லட்டுகள், இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. இது போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களால் படிக்கும் பழக்கமும், செய்தியின் முக்கியத்துவமும் ஒருபோதும் குறையப்போவதுஇல்லை. தற்போது மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருக்கும் பலர் பிடிஎப் முறையில் உள்ள கட்டுரைகளையும், கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற படைப்புகளையும் இணையம் மூலமாக படிப்பது பரவாலக காணப்படுகிறது. அதை அவர்கள் படிப்பது மட்டுமின்றி மற்ற வாசகர்களுடன் பகிர்நதும் கொள்கின்றனர். இதனால், நாளிதழின் விற்பனை எதிர்காலத்தில் குறையுமோ ஒழிய படிக்கும் பழக்கம் மற்றும் நாளிதழின் ஆதிக்கம் என்றும் குறையப்போவது இல்லை. வித்தியாசம், ஆன்லைன் நாளிதழ் ஒரு பிரதி ரூபாய் இரண்டுக்கு விற்கப்படும் அவ்வளவுதான். இதனால் நாம் நம் நாட்டையும், காட்டையும் காப்பாற்றமுடியும். வருடா வருடம் இந்தியாவில் மட்டும் 40 மில்லியன் டன் பேப்பர்களை நாம் நாளிதழ் அச்சடிக்க செலவழிக்கின்றோம். 

படிக்கும் தளம் தான் இங்கு மாற்றப்பட்டு உள்ளதே தவிர வாசிப்பு மற்றும் வாசிப்பு பழக்கம் இணையம் மூலம் அதிகப்படுத்தப்பட்டுதான் உள்ளதே தவிர குறையவில்லை. சமூக வளைதளம் மூலம் எந்த ஒரு செய்தியும் காட்டுத் தீ போன்று பரவ வைக்கமுடியும். 

கடந்த 17 வருடங்களாக தி இந்து நாளிதழை படிக்கும் நான், கடந்து 3 வருடங்களாக தி இந்து நாளிதழையும் மற்ற வெளிநாட்டு பத்திரிக்கைகளின் கட்டுரைகளையும் இணையம் மூலமாகத்தான் படித்து வருகிறேன். ஆகையால், இணையத்தின் வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை அடியோடு மறைத்து விட்டது என்ற எண்ணம் எல்லோரும் மாற்றிகொள்ள வேண்டிய ஒரு எண்ணம். 

எல்லாற்றுக்கும் மேல், எந்த அளவு இணையத்தை உபயோகிக்கிறம் என்பதை விட இணையத்தில் எதை எவ்வளவு நேரம் வாசித்தோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 


Monday, January 20, 2014

Need to Think.....Editorial from Thuglaq

Editorial from 22.01.2014 Thuglaq
Need to think.......
in English J.Bharath, Thanjavur.

If its a rule there will be some set of protocols. If the rule itself is like a "stunt" scene, only confusion remains. In Delhi, the same thing happened when Kejriwal attempted to make Janata Dharbar.

Kejriwal's government said, "the people's grievance will be heard by person, and their petitions will be scanned and the due actions will be taken in due course". He came and sat with his group of Ministers. It was a large crowd. India don't have any grievance and Indian citizens don't have any problems, but if instant cure is available for particular problems in the sense, definitely people will come.

Its not a new thing happened in India. In Karnataka Ramakrishna Hegde had this as a habit. Daily morning, after his walking, he used to meet people in his house entrance. If the problem's severity is more he will order on the spot if its less he would inform his subordinates. This process was one of the best process during his rule. Because, this process is one of the key features of his rule, not one of the stunt scene of his rule. Kejriwal was managed to head an Exhibition so too much of crowd and that much of confusions.

The Delhi CM's rule might end as a drama. He promised for 700 liters of water. Later, they announced its not applicable for the non-metered connection. Now, its an useless scheme. Water scene is over. Next, Electricity scene, he promised it will be reduced by 50%. In Tamil Nadu till 100 units Re.1, till 200 units Rs.1.50, but Kejriwal government fixed till 200 units Rs.1.95 & this rate is applicable only for three months. No one knows that whether it will be increased or not in the days to come.

No red light. No block of traffic for want of him. No home is needed. No big home. Okay I will take the big home. These kind of scenes are not related to the rule. But this is also stunt. We had Chief Ministers who lived an extra ordinary normal life compared to him !!




Wednesday, January 8, 2014

அன்பே சிவம்.



நான் யார்?
ரமணரின் பார்வையில். 
- Writes, J.Bharath, 

நான் என்பது அகந்தையை அதிகரிக்கும் என்கிறார் ரமணர். அந்த நான் என்பவர் நம்முள் எங்கு இருக்கிறார். உன்னால் உன் நெஞ்சின் மீது கை வைத்து நான் என்றால் நான் என்று கூறலாம். ஆனால், அது நீ இல்லை உன் உடலில் ஓர் பகுதி அவ்வளவுதான்.

ரமணரின் வழியில், நான் என்ற எண்ணத்தை பற்றி அலசி ஆராய்ச்சி செய்தால், நம் மனம் மற்றவைகளில் தேவையில்லாமல் நுழையாது.

நான் யார் என்பதை ஒருவன் அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது. அவ்வாறு செய்யும் செயல் கடவுளிடம் சற்று நெருங்குவது போலத்தான். அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள்.  மனமே கோவில் மனிதனே தேவன் என்று. நம் எண்ணங்கள் நம் செய்ல்கள் எல்லாம் எப்போது ஒரு நிமித்த நிலைக்கு வருகிறதோ அப்போது நம்மால் சற்று கடவுளை உணர முடியும்.

கடவுளை உணருவதும், உன்னை நீ உணருவதும் சற்று சமமே. நாம் யாரும் நம்மை யார் என்று எப்போதுமே ஆராய்வது கிடையாது. ஏதோ, பிறந்த்தோம், வாழ்கிறோம். அவ்வளவுதான். சராசரி வாழ்க்கை. நீ யார் என்பதை உணரும் தருணம் உனக்குள் ஒரு நிகழ்வு நிகழும், அந்த நிகழ்வை பற்றிக்கொண்டு அப்படியே சென்றால், கடவுளிடம் நெருங்கும் வாய்ப்பை பெறலாம் என்கிறார் ரமணர். அவர் கூறியதை சமஸ்கிருத்த்தில் சொல்லி வாசகர்களை நன் குழப்ப விரும்பவில்லை.


ரமணரும் சொல்கிறார், நான் என்பதை தேடிக்கொண்டுஇருக்கின்றேன் என்று.
நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். முதன் முதலாக, இந்த உடலும் அதன் இயக்கங்களும் (அன்னமயகோசம்) நாமல்ல என்று அறிகிறோம். இன்னும் ஆழ்ந்து விசாரிக்கும் போது மனமும் அதன் விருத்தி பேதங்களும் (மனோமயகோசம்) நாமல்ல என்று உணர்கிறோம். அடுத்தபடி எண்ண விருத்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்று கவனிக்க வேண்டும். விருத்திகள் தாமாகவே கிளம்பிக் கொண்டிருக்கின்றன - ஒன்று, மேலோட்டமான சாதாரண நினைவுகளாகவே, அல்லது ஆலோசிப்பவைகளாகவே எழுகின்றன. அவை புத்தியிலேயே இயங்குகின்றன. அவற்றை புத்திப்பூர்வமாக உணர்வது யார்?

எண்ணங்களின் இருப்பும், அவற்றின் தெளிவான விவரங்களும் இயக்கமும், 'நான்' எனும் தனி ஜீவனுக்கே தெரிகின்றன. இவ்வாறு எண்ணங்களின் இருப்பையும் தொடர்பையும் உணர்வது எதுவோ அதுவே ஜீவவியக்தி அல்லது 'நான்' எனும் அகங்காரம் (அகந்தை), புத்தி (விஞ்ஞானமய கோசம்) என்பது அகந்தையின் உபாதியே (செருகுவதற்குரிய கவச உறை மட்டுமே) அன்றி அதுவே அகந்தை ஆகாது. இந்த அகந்தை, அதாவது 'நான்', என்பது என்ன? அது எங்கிருந்து கிளம்புகிறது? கனவிலும் நனவிலும் அதே 'நான்' உடன் தொடர்கிறது. கனவைப் பற்றி நனவில் இப்போது விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

விழிப்பு நிலையில் இப்போதுள்ள 'நான்' யார்? 'நான்' தூக்கத்திலிருந்து வெளிப்பட்டவன் எனின், தூங்கும் போது அறியாமை இருளில் 'நான்' அழுந்திக் கிடந்தேன் என்று விழித்தபின் தெரிகிறது. வேத சாஸ்திரங்களும் ஞானியரும் ஐயமறக் கூறும் ஆன்ம சொரூபம் அந்த அழுந்திடக் கிடந்த அகந்தையாகிய 'நான்' ஆக இருக்க முடியாது. தூக்கத்தைக் கடந்து இருப்பதும், தூக்கத்தின்போது கனவிலும், பின்னர் நனவிலும் அந்த நிலைகளின் குணங்கள் அறவே இல்லாமல் இருந்து வருவது எதுவோ அதுவே யதார்த்தமான நான்.

அவஸ்தாதிரயத்தின் (துயில், கனவு, நனவு ஆகிய மூன்று நிலைகளின்) சாட்சியாய் (சான்றாய், நேர்காட்சியாளனாய்), அதிஷ்டானமாய் (உறைவிடமாய்), குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே 'நான்' எனும் ஆன்ம சொரூபம், என்று இவ்வாறு அகமுக விசாரணையால் அனுபவத்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பஞ்ச கோசங்களையும் கடந்து நிற்பது ஆத்ம சொரூபம். ஆநாத்ம (ஆன்மா இல்லாத) தத்துவங்களை 'நானல்ல, நானல்ல' என்று ஒதுக்கித் தள்ளிய பிறகு அங்கே விளங்குவது தய சத்-சித்-ஆனந்த சொரூபமாம் ஆத்மாவே.

பஞ்ச கோசங்களாவன: அன்னமயம் (உடல்), பிராணமயம் (ஐம்பொறிகளும் பிராணனும்), மனோமயம் (ஐம்புலன்களும் மனமும்), விஞ்ஞானமயம் (ஞானேந்திரியமும் புத்தியும்) மற்றும் ஆனந்தமயம் (மாண்டூக்ய உபநிஷத்தில் கூறப்படும் ஆழ்ந்த உறக்க நிலை).





அகம் பிரம்மாஸ்மி